Shankar’s Weblog

August 24, 2009

கந்தசாமி ஒரு கவுந்தசாமி!

Filed under: cinema, internet, lingua, living, tamil — Shankar Manickam @ 9:23 am

kandasamy2

Recently, The Fame cinemas opened in Forum value mall,  Whitefield…The last watched movie  “THE HANGOVER” was simply awesome!

Enna ellave theriyale adhe expectationoda I entered for this movie…

The first fight(sorry attack) on Mansoor Ali Khan was bit funny(hey….who was spitting in the back?)..but I was not expecting the same over the entire movie!

There is no strong tortoise(adhampa flash back) story like Ramana for justifying  his revenge! Ada  ‘Shivaji’ la kooda andha one rupee matter sooper pa!

If your blood is boiling for no reason, then u must have BP.Chillunnu oru ‘Beer’ vaangi kudichuttu poi irundha Dhanuvukku 60 crores save agi irukkum..

I was waiting for some strong matter to kick the screenplay fast, but that didn’t come till last minute..;-)

வடிவேலை என்னமோ வெடிவெலுன்னு சொன்னாங்க…..ஒரு கொள்ளு பட்டாசு கூட வெடிக்க வில்லை!
அவரு காமெடி கீமடி எதுவும் பண்ணலியா?

கலைப்புலி வடிவேலுக்கு காசு மிச்சம் பிடுச்சு ஷ்ரியாவுக்கு குடுத்துட்டார் போல.. அந்த அம்மா என்னடான்னா பொசுக்கு பொசுக்குனு குளிக்குது, பாட்டு பாடி தள்ளுது, ஓடி ஓடி லுவ் பண்ணுது … ஆனா நடிப்பு மட்டும் கிலோ என்ன விலைன்னு கேட்குது?

Sushi Ganeshan can do somet other job…indha photography, animation, assistant, technical writing, mainframes la coding, database tuning indha maathiri.. direction vendam…please makkal paavam…makkal paavam..;-)

“Enn peru Meena Kumari….enn ooru Kanya kumari” pondra karuthaana padalgalai ezhina kai yarodadhupa …non sense…

What an Imagination to have such song inside a bus…dei idhellam Kazhugu padathile Rajini pannadhuda… innamum adha marakkave illayadaa…??

Idhe Seval vesam, black money matter ellam Shankar, Muragadoss kitte kudutha pinniduvaangale raja..

Agamotham

Kanthasamy ->Kavundhasamy!

Comments form my friends

Ramc:
Kanthasamy- Nondha samy!

Srimi:

Kanthasamy- Mokkaisamy

See what our ‘Kalaipuli Dhanu’ may think

Aalavandhan ennai Alikka vandhan
Kanthasamy ennai aakiduvan Ondi sami!

idhukku ippadi oru build up..
20 yrs munnale vandha telugu movie maari oru masala feel sorry smell!
Enakku kovam varumbodhellam Shriya vandhu samadhanapaduthittayya!

varrrttaa..next meet panren..

February 2, 2009

Filed under: cho, tamil — Shankar Manickam @ 4:18 pm

Bravo Cho…besh besh….sorry bash bash ;-)

April 3, 2008

Is it the Real Problem?!

Filed under: lingua, living, tamil — Shankar Manickam @ 9:59 am

பெங்களூருவில் கலவரம் நடக்க, பெரிய காரணங்கள் ஏதும் தேவை கிடையாது. தமிழர்கள் பெரிசாக ஏப்பம் விடுகிறார்கள், அதனால் தூக்கம் கெடுகிறது போன்ற காரணங்களே போதும்.

வேறு பிரச்சினை இல்லாத நேரத்தில் மொழியுணர்வு தூண்டிவிடப்படுகிறதுபுதிய பிரச்சினைகளைத் தேடி அலைகிறார்கள், ஒகேனக்கல் அப்படிப்பட்ட ஒரு பிரச்சினையேகபினியில், கிருஷ்ணராஜசாகரில் தண்ணீர் திறந்துவிடப்படாத வேளைகளில் ஒகேனக்கல் காய்ந்த குட்டைதானே? அங்கு கூட்டுக் குடிநீர்த் திட்டம் வைத்தால் என்ன, வைக்காவிட்டால் என்ன? எந்த வகையில் இது கர்நாடக மக்களைப் பாதிக்கப் போகிறது? யோசிக்கவிடுவதில்லை கிருஷ்ணாக்களும் எடியூரப்பாக்களும். தமிழன் மீதான தங்கள் மேல்நிலையை உறுதிப்படுத்துவதற்கான இன்னொரு ஆயுதமாகத் தான் இதையும் பார்க்கின்றார்கள். அப்படியே ஒகேனக்கல் அவர்களின் வாழ்வாதாரத்தின் பிரச்சினையாகவே எடுத்துக் கொண்டாலும், அதற்கும், தமிழ்சினிமா திரையிடும் அரங்குகளுக்கும் என்ன சம்மந்தம்? அவற்றை ஏன் சூறையாட வேண்டும்?

கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால், பெங்களூருவின் கோபம் தமிழர்கள் மேல் மட்டும் அல்ல என்பது புரியும்சாப்ட்வேர்காரர்கள் கிளப்பும் கலவரம் என்ற பதிவில் எழுதியிருந்தேன்:

10000 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, நகர மத்தியில் 2000 ரூபாய் வாடகை வீட்டில் இருந்துகொண்டு, கைனடிக் ஹோண்டா வைத்துக்கொண்டு பந்தாவாக வலம் வந்தவன், அந்த 2000 ரூபாய் வாடகைக்கு நகரத்திலிருந்து 30 கிமீ தூரம் அனுப்பப்படுகிறான், கைனடிக் ஹோண்டாவா? ஹோண்டா சிவிக்டா என்கிட்ட என்று வார்த்தைகள் இல்லாமல் நக்கல் அடிக்கப்படுவதாக உணர்கிறான்சமூகத்தின் ஆரம்பப்படிகளில் இருந்தவன், இப்போதுக்கு கீழிருந்து சில படிகள் மட்டுமே மேல் இருக்கிறான

இந்த மாற்றம் பெங்களூருவில் கொஞ்சம் முன்னாலிருந்தே நடந்துகொண்டிருக்கிறது. கணினி சாராத் தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து கடந்த 20 வருடங்களில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வருகிறது.

பொருளாதார ஏற்றத்தாழ்வை, ஒரு சாதாரண பெங்களூர்வாசி எப்படிப்பார்க்கிறான்? கன்னடம் பேசி உயர்வாக வாழ்ந்துகொண்டிருந்தவன், கன்னடம் பேசாதவர்களால் தாழ்வாக்கப்படுவதாக உணர்கிறான். பொருளாதாரத்தையும் மொழியையும் போட்டுக் குழப்பிக்கொள்கிறான். வேறு மொழி பேசுபவர்களை எதிரியாகக் கருதத் தொடங்குகிறான்.

பொருளாதாரச் சமச்சீரின்மை, கோபத்தை உருவாக்ககிறது. அந்தக் கோபத்தை எப்படி வெளிப்படுத்தலாம் என்பது மட்டும் குழப்பமாக இருக்கும் வேளையில், வருகிறார்கள் அரசியல்வாதிகள்.

காவிரி ஆற்று நீர் பிரச்சினை, இரு மாநில விவசாயிகளை மட்டுமே நேரடியாக பாதிக்கக்கூடிய பிரச்சினை. காவிரி தீரத்தில் இல்லாத பெங்களூரில் ஏன் கலவரம் வெடிக்கிறதுஎன்கிட்டே பணம் காசு கம்மியா இருக்கலாம்ஆனா, நான் விட்டாத்தான் உனக்குத் தண்ணி என்று பெங்களூர்கரர்களின் அடிமனத்தில் உள்ள One upmanship தூண்டிவிடப்படுகிறதுதமிழர்களுக்குப் படியளக்கும் பெருமை தங்களிடம் இருப்பதாக வடிவமைக்கப்படுகிறது. இந்தப் பெருமை, அவர்களின் மற்ற குறைபாடுகளை மறக்கடிக்கிறது.

இந்தப் பெருமை, வேறு மாநிலத்தவர்களிடம் செல்லுபடியாவதில்லை. தமிழனுக்குத் தண்ணீர் தருகின்ற அன்னதாதாக்களாகத் தான் இருப்பதாக நினைக்கிறான். அடிபணிந்து இருக்கவேண்டிய தமிழர்கள் தங்கள் ஊரில் தன்னை விட வசதியாக வாழ்வதாக எண்ணிப் பொறுமுகிறான்

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, காவிரி நீரை விடமாட்டோம் என்று சொல்வது, அவர்களின் பெருமையைத் தக்கவைத்துக்கொள்வதாக நினைக்கப்படுகிறது. எந்தச் சமரசத்துக்கும் உடன்படமாட்டோம் எனச் சொல்லும் அரசியல்வாதி ஆபத்பாந்தவனாக பார்க்கப்படுகிறான். சமரசத்தை பரிசீலிக்கும் அரசியல்வாதிக்கு அது சாவுமணியாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாரும் அதை முயற்சிப்பதில்லை.

எல்லாத்தரப்புக்கும் இழப்பை மட்டுமே தரக்கூடிய இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்றுதான் தீரும்?

இன்றைய தேர்தல் வெற்றியைப் பற்றி மட்டுமின்றிநாளைய வளமான சமுதாயத்தைப்  பற்றியும் கவலைப்படும்  அரசியல்வாதிகள்

இன்றைய பரபரப்பை மட்டுமே நினைக்காமல், பொறுப்புணர்வோடு உண்மைநிலையைக் காட்டும் ஊடகங்கள்

நிஜமான, எல்லாத்தரப்புக்கும் கிடைக்கும் பொருளாதார சுபிட்சம்

பெரிய கனவுகள்!

ஆனால், இவை கர்நாடக மாநிலத்துக்கு மட்டும் சொந்தமான பிரச்சினைகள் இல்லை. ராஜ் தாக்கரே நாலு குண்டர்களைக் கூட்டி வட இந்தியர்களை அடிப்போம் என்று கிளம்பும்போது கிடைக்கும் ஆதரவும், ஏறத்தாழ இதே போன்றதுதான். மும்பையில் கொழிக்கும் வட இந்தியர்களின் தான இயலாமை, மராட்டி பேசாதவர்களின் மீதான கோபமாக எதிரொலிக்கிறது.

நாளை தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு பிரச்சினை வெடிக்காமல் இருக்கவேண்டுமானால், பொருளாதார ஏற்றத்தாழ்வை, மொழிரீதியாக மொழிபெயர்க்க முடியக்கூடாது. தமிழைத் தேர்ந்தெடுக்காமலேயே உயர்கல்வி வரை செல்பவன் நிச்சயமாக தொழிற்கல்விக்குத் தான் செல்வான்பெரும்பாலும் பொருளாதார சுபிட்சத்தை அடைவான்பொருளாதார சுபிட்சம் பெறாத பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி படித்தவராக இருப்பார்கள்கவனிக்கவும்தமிழ்க்கல்வி படித்தால் பொருளாதார சுபிட்சம் பெறமுடியாது எனச் சொல்லவில்லைதேன்மாரியே பொழிந்தாலும்கூட பொருளாதார சுபிட்சம் பெறாத ஒரு சதவீதத்தினர் இருப்பார்கள், அவர்களில் பெரும்பாலானோர் தமிழ்க்கல்வி  படித்தவர்களாகத்தான் இருப்பார்கள். அன்றைய அரசியல்வாதிகளுக்குதமிழ் படித்தவன்படிக்காதவன் என ஒரு ஏற்றத்தாழ்வைக்  கட்டமைப்பதும்ராஜ் தாக்கரேக்களும் நாகராஜ்களும் தமிழ்நாட்டிலும் உருவாவது சாத்தியப்படக்கூடும்.

Courtesy: http://penathal.blogspot.com

March 31, 2008

So called ‘Kavidhe’… ‘kavidhe’….!

Filed under: living, tamil — Shankar Manickam @ 4:21 am

Its been long back we wrote some poem(M Not feeling shy to say this as poem, as I used to do this in SREC times!). My wife warns me often to avoid such poems to save the kid in future. (Naanga ellam ketta poitom? Eppadi ellam yosikkarangada).

Recently one of my friend(Thillai) had Bday and here are some mails(poems) wished him.

First one(Nagoo) wrote:

master,

ungalakaga oru siriya kavidai…..

six adipavar nambal little master
tea podum avar nambal thillai master

namakku illai thollai…
yen endral alcatelil illai thillai….
pavam andha project manager pillai…
eppadi than handle panna porano thillaiin thollai…. ;-)

Second one also by Nagoo:

kelvi kepom nanga….
badil solla vendum neenga….
illana kadi poduvom veenga….
readya iru nee kadi thanga….

Thillai poran hindi classuku….
yarukko podran avan brackettu….
enna peru andha figurukku….
dont feel shy, solradukku….

thillai aduran dancu….
girls miss panna poranga balancu….

Third one: Its my turn..

Pala, vazhai maangani

Vazhthura pasanga velankani

Vijay, Ajith, Kunalu

Thillai munnale fanalu

Varusathil kadaisi panguni

Thillaikku udembellam macham ini

Tom Dick and Harry

Thillai aalu innaiku Saree

Kaasu mela kaasu

avaru usiru irukiradho USu

Govt solradhu Panchayatraj

Naama wish pannuvom Thillaraj

we may chew this after sometime and keep the blues in front!

March 26, 2008

Baby Names? $!@#@! $

Filed under: lingua, tamil — Shankar Manickam @ 7:08 am

Time is rolling for my kid to come out and see the world.

Still I cant select a name for him/her????!!!

I and my wife never seems to be confused, even in the time of our marriage too.  we got lot of names from the internet. But nothing seems to be fit for us.

some seems to be old,

some are very new ;-) no one should laugh after hearing that….

some are Tamil names(My wife feels it will be odd in cosmo bengalooru, It will be better than our City name anyway)

some are north indian names( I dont like all “sshh” pronuncation, Also (s)he shud not have a girl/boy friend in his kinter garden)

what to do?

we can try for some mallu funda… Change the first letter in the name and form the new name like.. Jinesh(from Dinesh) Sanoj( from Manoj)… But nothing seems to be OK for us.

 What abt re-ordering lettters from our name.. Oh… what a good idea.. but still lot of ‘h” in tha name.

I dont think my father had this much of confusion… seri, I studied in Panchayat school. adhukku idhu podhummnu nenachuttar pola!  Enna kodumai sir idhu??

Still thinking…. what abt “Excuse me?”

March 25, 2008

அரை மணிநேரத்தில் வருமானவரி தாக்கல்….

Filed under: finance, internet, tamil — Shankar Manickam @ 10:17 am

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (31/07/2007) வெற்றி கரமாக நான் தாக்கல் செய்துவிட்டேன்…
0. http://www.incometaxindiaefiling.gov.in/portal/index.jsp செல்லவும்.
1. நீங்கள் சம்பள ஊழியராக இருப்பின் ITR-1 பாரத்தை தேர்ந்தெடுக்கவும். இதற்கு மற்ற எந்த ஆவணங்களும்(உதா. பாரம் 16, 16அ ) தேவையில்லை.
2. Download Return Preparation Software for selected Return Form. தொடுப்பை சொடுக்கி ITR-1
பக்கத்திற்கு பிடி எப் பக்கத்திற்கு சென்று உங்கள் வருமான விவரங்களை உள்ளீடவும்.
3. உங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாரம் 16 ல் உள்ளபடிக்கு விவரங்களை பூர்த்திசெய்யவும்.
4. நீங்கள் உள்ளீடு செய்தப் பிறகு “Check form” என்கிற பொத்தானை சொடுக்கி சரிபார்க்கவும். தவறுகள் இருந்தால் திருத்தவும்.
5. Generate bar code பொத்தனை அழுத்தவும்.
6. Export to XML பொத்தானை அழுத்தவும், பிறகு .xml என்கிற கோப்பை கணினியில் சேமிக்கவும்.

7. பிறகு மறுபடியும் http://incometaxindiaefiling.gov.in
பக்கத்திற்கு வந்து லாகின் செய்தப் பிறகு Submit return என்கிற பொத்தானை அழுத்தவும்.

8.சேமித்த xml கோப்பை browse கொடுத்து submit செய்யவேண்டியது தான்.
9. இறுதியாக உங்களுக்கு ITR-V சான்றிதழ் பாரம் கிடைக்கும். அவற்றை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவும்.

சொதப்பல்:
XML கோப்பை அப்லோட் செய்யும்பொழுது பிறந்த தேதி சொதப்பியது… அவற்றை ஒருவாறு ஊகித்தவாறு notepad திறந்து மாற்றம் செய்து அனுப்பினேன்.

****-MM-**
இவற்றில் **** வருடமும். MM=01, **01
கொடுத்தேன்.




 

Nandri: http://techtamil.blogspot.com

Sujatha’s final Katradhum petradhum

Filed under: cinema, sujatha, tamil — Shankar Manickam @ 10:11 am

‘கற்றதும் பெற்றதும்’ல் சுஜாதா…

மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.

“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.

நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ” என்றேன்.

“எதுக்குப்பா?”

“தொடுங்களேன்!”

சற்று வியப்புடன் தொட்டார்.

“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன். ‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?’Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”

“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.

“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!” என்றேன்.

அசந்து போய், “கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”

“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!” என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. ‘படையப்பா’வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே… அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். “ரம்யா கிருஷ்ணன்” என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் “ஜகதலப்ரதாபன்” சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது… இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி’யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.

மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் “ஆபிச்சுவரி” பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை… நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை… இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்… ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!

சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், “சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!”.

ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது ‘அக்னாஸ்டிக்’காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல… வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.

இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்… முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் “கொட்டு மேளம்” கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.

அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்… “நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே… என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?” என்று.

நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்… “நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!” என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ‘ரோஜா’ வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், ‘அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!’ என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். “ஆ” கதையைப் படித்துவிட்டு, “என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்” என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், ‘பாலம்’ கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

நன்றி: தேசிகன்

Filed under: cinema, sujatha, tamil — Shankar Manickam @ 9:25 am
Tags: , ,

சுஜாதா அஞ்சலிப் பதிவுகள்பட்டியல்

Source: ‘Anbudan’ Bala


http://balaji_ammu.blogspot.com/2005/05/colossus-by-name-of-sujatha.html
http://balaji_ammu.blogspot.com/2008/02/419.html
http://balaji_ammu.blogspot.com/2008/03/422-1.html
http://desikan.com/blogcms/?item=208
http://desikan.com/blogcms/?item=207
http://desikan.com/blogcms/?item=206
http://desikan.com/blogcms/?item=205

http://balakumaranpesukirar.blogspot.com/2008/03/blog-post.html
http://naalavathukann.blogspot.com/2008/03/blog-post.html
http://tamiloviam.com/unicode/02280803.asp
http://karaiyoram.blogspot.com/2008/03/blog-post.html
http://penathal.blogspot.com/2008/02/blog-post.html
http://pitchaipathiram.blogspot.com/2008/02/blog-post_27.html
http://domesticatedonion.net/tamil/?p=741
http://cyrilalex.com/?p=387
http://imohandoss.blogspot.com/2008/02/blog-post_28.html

http://masivakumar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://xavi.wordpress.com/2008/02/28/sujatha/
http://kasiblogs.blogspot.com/2008/02/1935-2008.html
http://jataayu.blogspot.com/2008/02/blog-post_28.htmlhttp://icarusprakash.wordpress.com/2008/02/27/thank-you-sir-for-everything/
http://asifmeeran.blogspot.com/2008/02/blog-post_29.html
http://dondu.blogspot.com/2008/02/have-nice-time-sujatha-sir.html
http://valai.blogspirit.com/archive/2008/02/27/sujatha.html
http://andaiayal.blogspot.com/2008/02/blog-post.html

http://balaji_ammu.blogspot.com/2008/02/420.html
http://anamikatalks.blogspot.com/2008/02/author-sujatha-is-no-more.html
http://mogadalai.wordpress.com/2008/02/27/sujatha-rip/
http://www.chakkarapani.com/graffiti/?p=316
http://balajiulagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://chennai.metblogs.com/archives/2008/02/writer_sujatha_is_dead.phtml
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20802273&format=html
http://groups.yahoo.com/group/tamil-ulagam/message/38810
http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/12866

http://naachiyaar.blogspot.com/2008/02/blog-post_28.html
http://alexpandian.blogspot.com/2008/02/blog-post.html
http://rathnesh.blogspot.com/2008/02/blog-post_28.html
http://blogintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://thulasidhalam.blogspot.com/2008/02/blog-post_28.html
http://nganesan.blogspot.com/2008/02/amarar-sujatha.htmlhttp://santhipu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://vasanthamravi.blogspot.com/2008/02/blog-post_27.html
http://surveysan.blogspot.com/2008/02/blog-post_1876.html
http://devakottai.blogspot.com/2008/02/blog-post_5951.html
http://kadagam.blogspot.com/2008/02/blog-post_2716.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_7099.html

http://dondu.blogspot.com/2008/02/blog-post_28.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_27.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_1280.html
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_29.html
http://puthupunal.blogspot.com/2008/02/blog-post.html
http://cdjm.blogspot.com/2008/02/blog-post.html
http://vadakarai.blogspot.com/2008/02/blog-post.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/02/blog-post_28.html
http://usthamizhan.blogspot.com/2008/02/blog-post.html
http://jothibharathi.blogspot.com/2008/02/blog-post_28.html

http://kaalapperungkalam.blogspot.com/2008/02/blog-post_2890.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_9834.html
http://enularalkal.blogspot.com/2008/02/blog-post_27.html
http://feeds.vicky.in/~r/dhandora/~3/242335441/
http://osaichella.blogspot.com/2008/02/blog-post_100.htmlhttp://ravisrinivas.blogspot.com/2008/02/blog-post_29.html
http://thoughtsintamil.blogspot.com/2008/02/blog-post_28.html
http://mrishan.blogspot.com/2008/02/27022008.html
http://pettagam.blogspot.com/2008/02/blog-post_27.html
http://premkg.blogspot.com/2008/02/blog-post_27.html
http://ponvandu.blogspot.com/2008/03/blog-post.html

http://ilackia.blogspot.com/2008/03/blog-post.html
http://bashakavithaigal.wordpress.com/2008/02/28/ச௠வாரஸ௠யம௠-போய௠விட௠டதா-ச/
http://radiospathy.blogspot.com/2008/02/blog-post_28.html
http://oagaisblog.blogspot.com/
http://tvrk.blogspot.com/
http://pradeep.blogspot.com/2008/03/blog-post.html
http://losangelesram.blogspot.com/2008/02/1.html
http://sangappalagai.blogspot.com/2008/03/44.htm
http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html http://madippakkam.blogspot.com/2008/02/blog-post_28.html

http://umakathir.blogspot.com/2008/02/blog-post_27.html
http://nattunadappu.blogspot.com/2008_02_01_archive.html
http://therinjukko.blogspot.com/2008/02/blog-post_27.html
http://harimakesh.blogspot.com/2008/02/189.html
http://koculan.blogspot.com/2008/02/blog-post_28.htmlhttp://sandanamullai.blogspot.com/2008/02/blog-post.html
http://poothoorigai.blogspot.com/2008/02/blog-post_27.html
http://bharateeyamodernprince.blogspot.com/2008/03/blog-post_03.html
http://dondu.blogspot.com/2008/03/blog-post_03.html

http://www.tamilstar.com/news/publish/article_5663.shtml

Blog at WordPress.com.